உலகின் பல நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த விவகாரத்தை முன்னாள் சி.ஐ.ஏ. ஏஜெண்டு ஸ்னோடன் வெளியிட்டார். அதன் பரபரப்பு இன்னும் ஒயவில்லை.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடப்பதற்கு முன்பாக சீனாவைச் சேர்ந்த சிலர், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் அமைச்சகங்களின் கணனிகளிலிருந்து ரகசியமாக உளவுத்தகவல்களை திரட்டியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
உள்நாட்டில் எதிர்ப்பாளர்கள் மீது சிரியா ரசாயன தாக்குதல்கள் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து, அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது.
அப்போதுதான் 5 ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீன இணையத் திருடர்கள் கணனி வாயிலாக உளவு தகவல்கள் திரட்டி உள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த பயர் ஐ இன்க் என்ற கணனி வைரஸ் எதிர்ப்பு தொழில்நுட்ப விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் எந்தெந்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து உளவு தகவல்களை சீன இணையத் திருடர்கள் பெற்றனர் என்பதை தெரிவிக்க அந்த நிறுவனம் மறுத்து விட்டது.
Your posts and his post didn’t coincide, the other tells a different story, while the other speaks only the opposite