இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்ஸிஸ்’-டைம் பத்திரிகை

pope_francisதனது இந்த ஆண்டின் சிறந்த மனிதராக, டைம் பத்திரிகை போப் பிரான்ஸிஸ் அவர்களைத் தேர்தெடுத்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ், மனசாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.

மிகக் குறுகிய காலத்தில், சர்வதேச அரங்கில் புதிதாக நுழைந்த ஒருவர் இந்த அளவுக்கு விரைவாக கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானது என்று அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் நான்சி கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

வறுமை, செல்வம், உலகமயமாதல் மற்றும் இதர முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதங்களில் போப் பிரான்ஸிஸ் அவர்கள் தன்னை மையப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கார்டினல்கள் குழுவொன்றால் போப்பாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அவர் போனஸ் ஏரிஸ் நகரின் பேராயராக இருந்தார்.

அமெரிக்கப் பகுதியிலிருந்து தேர்தெடுக்கப்படும் முதலாவது போப்பும் இவர் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.