சீனாவில் முஸ்லிம் மாகாணத்தில் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி

சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு.

ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர்.

சீனாவின் உய்குர் இன முஸ்லீம்கள் ( ஆவணப்படம்)

இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இது மிகச்சமீபத்தியது.

இந்த சம்பவங்களுக்கு முஸ்லீம் பிரிவினைவாதிகளே பொறுப்பு என்று பொதுவாக போலிசார் பழி சுமத்துகின்றனர்.

ஆனால் இதை இந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் இன முஸ்லீம்கள் மறுத்து, இந்த சம்பவங்களைக் காரணம் காட்டி தங்கள் மீது மேலும் ஒடுக்குமுறை நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.