அரசாங்க ஆதரவில் தனி ஜெட்டில் பயணம் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பணி நிமித்தமாகத்தான் அந்தப் பயணங்களை மேற்கொண்டதாகவும் அவை பொழுதுபோக்குப் பயணங்கள் அல்ல என்றும் கூறினார்.
நிறைய நிகழ்ச்சிகள் நெருக்கமாக இருந்ததால் வணிக விமானப் பயணங்கள் பொருத்தமாக இரா என்று மலேசிய கெஜட்டுக்கு வழங்கிய நேர்காணலில் ரோஸ்மா கூறினார்.
பாதுகாப்பையும் நேரத்தையும் கருத்தில்கொண்டு அமைச்சரவைதான் அப்பயணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது என்றாரவர்.
உல்டாப் பேச்சிலே உன்ன மிஞ்ச ஆளே இல்லையடி ! ஆள்தான் துயா கொலையை முழு புசிநிக்காயில் மறைதவலாசே நீ
மலேசிய பெண்களின் முன்னுதாரணம் நமது அன்பு பிரதமரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா அவர்கள். நாட்டின் முதல் பெண்மணி என்ற விஷேச அடிப்படியில் அவர் வெளிநாடுகளுக்கு நமது நாட்டின் பெருமைகளை உயர்த்திட பல்வேறு சிறந்த நடவடிக்கைளை செய்து வருகிறார். அவர் நமது நாட்டின் மற்றுமொரு தலைசிறந்த பெண்மணிகளில் ஒருவரான, தமிழ் கிளி , நாட்டிலேயே மிகச்சிறந்த அறிவிப்பாளர் டத்தோ கீதாஞ்சலி ஜி அவர்களைப் போலவே , டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மக்களின் நலன் கருதி, நாட்டின் மேல் விசுவாசத்தின் பேரில் பல நாடுகளுக்கு சென்று நாட்டுக்காக சேவையை தன்னலம் கருதாது செய்து வருகின்ற மகத்தான மாதர் குல மாணிக்கம். அவர் உலக பெண் குலத்திற்கே ஒரு மகத்தான உதாரணம், நமது நாட்டின் பெருமையின் சின்னம்.
அவர் நாட்டின் முதல் பெண்மணி என்ற அதிகார அடிப்படியின் காரணமாகவும், அவரின் பயண நோக்கத்தை முன் வைத்து அரசாங்கமே அவரின் சேவையை அங்கீகரித்து அவரின் பயணம் பாதுகாப்பாகவும், அமைதியான சூழலில் பயணிக்கவும் விஷேச விமானத்தை ஏற்பாடு செய்து தருவதில் என்ன தவற்றைக் கண்டீர்கள்? இது நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அத விடுத்து இந்த விஷேச சலுகையை அசிங்கப் படுத்த யாருக்கும் தகுதியும் உரிமையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.