நவீன அடிமை குற்றங்களைத் தடுக்க பிரிட்டன் திட்டம்

theresa_mayநவீனகால- அடிமை முறை மற்றும் மனிதக் கடத்தல்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசாங்கம், கடுமையான தடை நடவடிக்கைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகளை பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே முதலில் முன்வைத்திருந்தார்.

இவ்வாறான மனிதக் கடத்தல்கள் மற்றும் நவீனகால- அடிமை முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைக் காலத்தை 14 ஆண்டு சிறையிலிருந்து ஆயுள்கால சிறையாக உயர்த்துவதற்கு கடந்த ஆகஸ்டில் அவர் பரிந்துரை செய்திருந்தார்.

புதிய திட்டத்தின்படி, அடிமை முறை- ஒழிப்புக்கான ஆணையாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.

இவ்வாறான குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் பற்றி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரான்க் ஃபீல்ட் மேற்கொண்ட மீளாய்வு அறிக்கையும் வெளியிடப்படுகின்றது.

பிரிட்டனில் நவீனகால- அடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இருப்பதாக அவரது அறிக்கை கணக்கிட்டுள்ளது. -BBC