ரபிஸி: ஏஜி-க்கு நன்றி. ஆனால், அவருடைய எல்லாக் கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும்

rafiziதம் வங்கிக் கணக்குகளைப் பார்க்க வேண்டுமா தாராளமாக பார்வையிடலாம் என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் கூறி இருப்பதற்கு பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி நன்றி தெரிவித்தார். ஆனால், எல்லாவற்றையுமே பார்க்க விரும்புவதாக அவர் கூறினார்.

2005-இலிருந்து 2010வரை ஏஜி வாங்கிய சொத்துக்களை மட்டுமல்லாது அவரின் குடும்பத்தார் வாங்கிய சொத்துக்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவதாக ரபிஸி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அது அல்லாத எதுவும் திருப்தி அளிக்காது”, என்றாரவர்.