சீனாவின் அச்சுறுத்தல்: பாதுகாப்பை விஸ்தரிக்கும் ஜப்பான்

japan_china_island_001ஜப்பானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியினை அதிகரிப்பதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை வழங்கியுள்ளது.

சீனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிதி அதிகரிப்பு இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினுள் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்தள்ளது.

இதுதவிர ஜப்பானில் நீரியல் பிரதேசத்தில் விசேட ராணுவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளில் இருந்து தமது தீவுகளை பாதுகாக்கும் பணியினை இந்த பிரிவு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீனா கடற்பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள ஜப்பானுக்கு சொந்தமானது என்று கருதப்படும் பலத்தீவுகள் இருதரப்பினராலும் பரஸ்பரம் உரிமை கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.