மியான்மாரில் அதிகரிக்கும் கஞ்சா சாகுபடி : கவலையில் ஐ நா

nocreditமியான்மாரில் இந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கஞ்சா உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஐ நா கூறுகிறது.

இதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்ற அளவீடுகள் குறித்த அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயிகள் தமது வாழ்வாதாரங்களுக்கு மாற்றுவழி இல்லாத காரணத்தாலேயே, அவர்கள் கஞ்சா பயிரிடுகிறார்கள் என்றும் ஐ நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தென்கிழக்காசியவில் கஞ்சா பயிரிடப்படுவது குறித்த தனது வருடாந்திர ஆய்விலேயே ஐ நா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மாரில் 870 டண்கள் அளவுக்கு கஞ்சா உற்பத்தி இருக்கும் என அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.

இரண்டாவது இடம்

மாற்று பணப் பயிருக்கு வழியில்லை என்கிறார்கள் விவசாயிகள்

 

இந்த அளவை வைத்துப் பார்க்கும் போது, உலகளவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து கூடுதலாக கஞ்சா பயிரிடபடும் இடமாக மியான்மார் உள்ளது.

ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கான கிராக்கியும், பர்மாவின் வட கிழக்குப் பகுதியிலிருக்கும் ஷாண் மலைப் பிரதேசத்திலுள்ள ஏழ்மை நிலையும், அங்கு மாற்று பணப் பயிர்களுக்கான வாய்ப்பு இல்லாததுமே கஞ்சா பயிர் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் மட்டும் 5500 டண்கள் அளவுக்கு கஞ்சா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று கடந்த மாதம் ஐ நா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

அது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 49 சதவீதம் உயர்வு என்றும் ஐ நா அறிக்கை கூறுகிறது. -BBC