அமெரிக்காவின் போர்க் கப்பலை தாக்கியழித்த சீனா

china_fighter_jet_001அமெரிக்காவின் கப்பல் ஒன்றை தாக்கி அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 5ம் திகதி, தமது கப்பல் ஒன்று சீனாவினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தாக அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது.

இது தொடர்பில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த சீனா, தற்போது தங்களின் யுத்தக் கப்பல் ஒன்றை, அமெரிக்க கப்பலை தாக்கி அழித்ததாக ஒப்பு கொண்டுள்ளது.

சீனாவின் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்தமையாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் தன்னிச்சையான வான் பாதுகாப்பு வலயம் தொடர்பில், அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.