சிங்கப்பூரிலிருந்து 52 இந்தியர் வெளியேற்றம்

SingaporeRaceRiots-RiotingIndiansசிங்கப்பூர்: சிங்கப்பூரில், கலவரத்தில் ஈடுபட்ட, இந்தியர்கள், 52 பேர் நேற்று, வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூரில், 8ம் தேதி, “லிட்டில் இந்தியா’ பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார்.

இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; 16 போலீஸ் வாகனங்கள் உட்பட, 25 வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 28 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில், 200 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகித்ததால், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில், விசாரணை நடத்தினர்.

இந்த கலவரத்தில் தொடர்புடைய, இந்தியர்கள் 52 பேர் மற்றும் ஒரு வங்கதேசத்தவர் உள்ளிட்டவர்களால், சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டு அரசு கருதியது. இதையடுத்து, இந்த, 53 பேரையும் நேற்று, நாட்டை விட்டு வெளியேற்றியது.