பாகிஸ்தானில் ரகசிய அணு உலை: அம்பலப்படுத்தும் அமெரிக்கா

khushab_reactor_001பாகிஸ்தான் ரகசியமாக அமைத்து வரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக, அமெரிக்காவின் அறிவியல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அணு உலையில், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான மூலப் பொருள் தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் கட்டி வரும் அணு உலையை செயற்கைக் கோள் உதவியுடன் அமெரிக்க அமைப்பு பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது.

இதையடுத்து, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படத்தில் 4வது அணு உலை முடிவடையும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த அணு உலையில் சிறிய வகை அணு ஆயுதங்களை தயாரிக்க புளூடோனியம் என்ற மூலப் பொருள் தயாரிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்பங்களை தவறான முறையில் பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.