திமிங்கிலங்களை வேட்டையாடும் ஜப்பானிய கப்பல்களை கண்காணிக்க தென் சமுத்திர பகுதிக்கு மேலாக விமானத்தை பறக்க விடப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த விமானம் திமிங்கிலங்களை வேட்டையாடுவோருக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்க உதவுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்புகிறது.
திமிங்கிலங்களை வேட்டையாடுதல் என்பது அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகக் காணப்படுகிறது.
இந்த வேட்டை சட்டவிரோதமானதென பிரகடனப்படுத்துமாறு அவுஸ்திரேலிய சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. வழக்கின் தீhப்பு அடுத்த வருடம் வெளியிடப்படும்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் அதிக திமிங்கிலங்கள் கிடைப்பதால் ஜப்பானிய கப்பல்கள் திமிங்கில வேட்டைக்காக அன்டார்ட்டிக் கடலை அடைந்துள்ளன.
இத்தகைய பின்னணியில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராடும் ளுநய ளூநிhநசன யுரளவசயடயை என்ற குழு ஜப்பானிய கப்பல்களின் திமிங்கில வேட்டையைத் தடுப்பதற்காக மூன்று கடற்கலங்களை அங்கு அனுப்பி வைத்துள்ளன.