லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை பிரான்ஸ் மருத்துவர்கள் உருவாக்கினார்கள்.
இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசிஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர்.
உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இருதயம் 5 வருடங்கள் வரை ஒருவரின் ஆயுளை நீட்டிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.
இதை உடலுக்கு வெளியில் பொருத்தியும் இயங்கச்செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான இந்த செயற்கை மனித இருதயம் முன்பு உருவாக்கப்பட்ட தற்காலிகமாக செயற்கை இருதயத்தை போல் இல்லாமல் 5 ஆண்டுகாலம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.