கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் மரணமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன.
அந்தத் தாக்குதல் துப்பாகியை உருவாக்கிய அவருக்கு வயது 94.
மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார்.
எனினும் அவரது துப்பாக்கி முன்னாள் சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல், வார்சா உடன்படிக்கை நாடுகள் மற்றும் ரஷ்யாவின் மிக முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்தது.
கலாஷ்னிக்கோவ் அவர்களின் வடிவமைப்பை ஒட்டி தயாரிக்கப்பட்ட, பல லட்சக் கணக்கான துப்பாக்கிகள் உலகம் முழுவதும் தயாரித்து விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. -BBC


























அவர் தயாரித்தது AK 47 ரக ரைபிள் என்ற செய்தி செம்பருத்திக்கு தெரியாமல் போனது எப்படி ?