லெபனான் தலைநகர் பேய்ரூட்டில் நடந்துள்ள பெரிய குண்டு வெடிப்பொன்றில் முன்னாள் நிதியமைச்சர் மொஹமட் சாட்டா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சுன்னி முஸ்லிம் சமூகத்தவரான முன்னாள் நிதியமைச்சர் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரீரியின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.
கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்தபோதே சாட்டா குண்டுத் தாக்குதலில் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
அரச தலைமையகம் மற்றும் நாடாளுமன்றக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
கடந்த பல மாதங்களாகவே லெபனானில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடந்துவருகின்றன.
அண்டை நாடான சிரியாவில் நடந்துவரும் போரின் எதிரொலியாகவே லெபனானில் இந்த சமூகக் குழுக்களிடையிலான மோதல்கள் மோசமடைந்துள்ளன. -BBC