2030ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட பொருளாதார பலமிக்க நாடாக பிரித்தானியா மாறும் என புதிய பொருளாதார ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2028ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை தாண்டிச் செல்லும்.
இதனை தவிர பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளும் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக இருக்கும்.
ஜேர்மனியே தற்பொழுது ஐரோப்பாவின் பொருளாதார பலமிக்க நாடாக கருதப்படுகிறது.