அமெரிக்க இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

america_army_002அமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்பவர்களை பாலியல் கொடுமைப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.