மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கலாம்!

brain_001லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்படுகிறது.

இதற்காக, 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; கார் விபத்து மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் உட்பட, சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவருக்கும் திரைப்படம் காட்டப்பட்டு, அவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

அடுத்த நாள் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில், அவர்களின் கெட்ட நினைவுகள் அழிந்து இருப்பதும், அவர்களால் அவற்றை நினைவுபடுத்த இயலாததும் கண்டறியப்பட்டது.

மனிதர்களிடையில் உணர்வுபூர்வமாக தொடரும் நினைவுகளை நீக்குவதற்கு ஆதாரமாக, இந்த முடிவு உள்ளதாக, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.