கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்தவர் மைக்கேல், தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகில் அதிக பார்முலா1 போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமை ஜேர்மனியின் மைக்கேல் ஷுமேக்கரையே(வயது 44) சாரும்.
இவர் கடந்த 2012ம் ஆண்டுடன் கார் பந்தயத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று விட்டார்.
இவருக்கு பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் மெரிபெல் ரெசார்ட்டில் சொத்துக்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்று பனிச்சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட அவரது தலைக்காயம் பலமாக இருந்தது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கிரீனோபிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, ஷுமேக்கரின் நிலைமை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்று விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அள்ளி தரும் வள்ளலே நீண்ட ஆயுள் வரை வாழ இறைவனை கெஞ்சுகிறேன்