ரஷ்யாவில் நேர்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற 40 நாட்களே உள்ள சூழ்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 900 கி.மீட்டர் தொலைவில் உள்ள வோல்கோக்ராட் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடர் பேருந்து ஒன்றில் இன்று வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தெற்கு ரஷ்ய பகுதியில் இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் கேட்டு தாக்குதல் நடத்திவரும் தீவிரவாதிகள் செய்திருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆனால் இதுவரை நேர்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.