தெற்கு சூடான் தொடர்பில் எத்தியோப்பியாவில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு, தான் ஒரு குழுவை அனுப்புவதாக கிளர்ச்சித் தலைவர் ரெயிக் மச்சார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் போர் நிறுத்தம் கிடையாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்(Bor) நகரை தெற்கு சூடானின் அரச படைகளிடமிருந்து, தமது படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் மச்சார் கூறுகிறார்.
தெற்கு சூடானில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தமது மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது என்று கூறி, கிழக்கு ஆப்ரிக்கத் தலைவர்கள் விதித்த காலக்கெடு முடிவடைந்த சில மணி நேரங்களில், போர் நகரை கிளர்ச்சிப் படையினர் தாக்கியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீருக்கு ஆதரவான படைகளுக்கும் இடையேயான மோதல்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு பிரவியுள்ளன. -BBC