மத்திய ஆப்ரிக்க குடியரசில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான சண்டையில் 2 சிறுவர்கள் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய ஆப்ரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதில் 2 சிறுவர்கள் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த சண்டையில் 2 சிறுவர்களின் தலை துண்டிக்கப்பட்டது.
இதில் ஒருவர் சடலம் சின்னாபின்னமாக்கப்பட்டது, டிசம்பரிலிருந்து இதுவரையிலும் 16 சிறுவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என யுனிசெப் அமைப்பின் மத்திய ஆப்ரிக்க பிரதிநிதி சுலேமாஸ்னி டயாபேட் தெரிவித்துள்ளார்.
மூன்று வாரமாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டிலேயே அகதிகளாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமாதிரி தலையை வெட்டுறதெல்லாம் து…க்கனுங்களாதான் இருக்கும்..