உலக நாடுகளை ஆட்டிப் படைக்கும் பனிப்புயல்

storm_001உலக நாடுகள் பலவற்றிலும் பனிப்புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் பனி அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் பல இடங்களில் கடும் குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது.

மேலும், பல பகுதிகளில் சீதோஷ்ணம் மைனஸ் அளவில் இருந்தது.

நியூயார்க் நகரத்திலும் அதன் வடக்குப் புறநகர்ப் பகுதிகளிலும் குளிர்காலப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து லாங் தீவிலிருந்து அல்பானி வரை செல்லும் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் நேற்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து நியூயார்க்கில் அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பனிப்புயலின் தாக்கம் குறையும்வரை எங்கும், வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்று நகர கவர்னரான ஆண்ட்ரூ குயோமோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கனடா

கனடாவின் ரொறண்ரோவில் கடும் குளிர் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குளிர் காற்றானது -30 தொடக்கம் -40 வரையில் இருக்கும் எனவும், இத்தகைய குளிர் காற்றானது மனிதர்களின் தோலினை பாதிக்கும் தன்மை வாய்ந்தது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஒன்ரோறியாவின் தென் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் நேற்று மட்டும் 30 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

காலநிலையானது வாகன ஓட்டத்திற்கு ஒத்துழைக்கக் கூடிய நிலையில் இல்லை எனவும், வாகனச் சாரதிகளை முடிந்தளவு மெதுவாகவும் மிகவும் அவதானமாகவும் வாகனங்களை ஓட்டும்படி பொலிசார் கேட்டுள்ளனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாகாணங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பலத்த காற்று வீசி வருவதால், கடல் மற்றும் ஆற்றின் பக்கம் மக்கள் செல்ல வேண்டாம் என சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது.