மத்திய நைஜீரியாவில் இரு சமுதாயத்தினர் இடையே மூண்ட மோதலில் 30 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலை ஃபுலானி முஸ்லிம் பிரிவினர் நடத்தியதாக சோனாங் பிரிவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஃபுலானி முஸ்லிம் பிரிவினர் மறுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரையும் முன்பு சுமார் நான்கு மணி நேரம் சோனாங் பிரிவு மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது என்று அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் டெம் தெரிவித்தார்.
ஆனால், இந்த மோதலில் ஐந்து பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.