கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இன் ஆசிரியர் பாதர் லாரன்ஸ் எண்ட்ரு மீதான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகம் அனுப்பப்பட்டு அது போதாது என்று ஏஜி திருப்பி அனுப்பி விட்டாலும்கூட போலீஸ் அவர்மீதான விசாரணைக் கைவிடப்போவதில்லை. அவர்மீதான விசாரணை தொடரும்.
ஏஜி அலுவலகம் அனுப்பப்படும் ஆவணங்கள், மேலும் விசாரணை தேவை என்று கூறித் திருப்பி அனுப்பப்படுவது “வழக்கமான ஒன்றுதான்” என போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் அபு பக்கார் கூறினார்.
அதற்காக, விசாரணைக்கு லாரன்ஸை மீண்டும் அழைக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.
“இந்த வழக்கைப் பொறுத்தவரை மேலும் விசாரணை செய்ய எதுவுமில்லை. ஆனாலும், விசாரணை அறிக்கையை மீண்டும் அனுப்பி வைப்போம்”, என்றவர் தெரிவித்தார்.
அவரை பிடிச்சு ஜெயில்ள போடுங்குபா…!!!