அமெரிக்கா நடுங்குவதற்கான காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

america_winter_001அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன. வெப்பநிலை செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை. விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.

பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. குழந்தைகளை கண்டிப்பாக வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர்.

சிகாகோ போன்ற நகரங்களில் இன்னும் பனி விலகவில்லை. குளிர்காலம் என்பது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. ஆனால், சமீப காலமாக மிக அதிகமாக பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின்படி, வட துருவ பிரதேசங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது.

பல நாடுகளை விட, வட துருவ பிரதேசங்கள் மிக அதிக வெப்பம் உள்ளதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குளிர்காற்று, தெற்கு நோக்கி வீச வேண்டும். துருவ பிரதேச பகுதிகளில் இப்படி குளிர்காற்று சுழற்சி என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

இதை ‘போலார் வொர்டெக்ஸ்’ என்று கூறுவர். இது வட, தென் துருவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உயரே எழுந்து, அங்கேயே சுழன்று கொண்டிருக்கும். கீழே இறங்காது. இதன் சுழற்சி காற்றின் போக்கிற்கு ஏற்ப இருக்கும். ஒரு சில முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும். அதுபோல, எதிர்திசையில் திரும்பி வீசும். இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படாது.

மேலும் இந்த வெப்ப மயமாதலால் ஏற்படும் குளிர்காற்று சுழற்சி, பலமாக சுழன்று, ஒரு கட்டத்தில் பலவீனமடையும். அப்படி பலவீனம் அடையும் போது, மத்திய பகுதிகளில் மிக அதிகமாக குளிர் காற்றும், பனிப்பொழிவையும் ஏற்படுத்தும். இதெல்லாம் வட, தென் துருவ பகுதிகளில் தான் ஏற்படும்.

அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இப்படி குளிர் காற்றும், பனிப்பொழிவும் ஏற்படும் முன், மிகமிக அதிக வேகத்தில், அதாவது ஜெட் வேகத்தில் குளிர் காற்று வீசும். மாறி மாறி , எதிர்திசைக்கும், நேர் திசைக்குமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த குளிர்காற்று திடீரென தரை மட்டத்தையும் தாக்கும் வல்லமை படைத்தவை.

ஆனால், சமீப காலமாக தெற்கு நோக்கி இல்லாமல், கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட பயங்கர குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டாகவே, கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள், பிரிட்டனின் சில பகுதிகள் பெரும் குளிருக்கும், பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதுவே காரணம்.

வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.