சீக்கியர்கள் இறைவனைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். அச்சொல்லைப் பயன்படுத்த சீக்கிய சமூகத்துக்குத் தடை இல்லை என மூத்த வழக்குரைஞர் கர்பாலா சிங் கூறினார்.
“அது சீக்கியர் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் உள்ளது. எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவோம்.
“அதனால் பிரச்னை எழும் என நினைக்கவில்லை. இதுவரை எதுவும் இல்லை”, என்றாரவர்.
” தை முதல் நாளே தமிழண்டுப் பிறப்பு ”
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
விரைவில் உங்களின் …..
வீட்டுக் கதவைத் தட்டும் ….
மத ஒருமைப் பாடு !!
அம்னோ நீதிமன்ற தீர்ப்பு கிருஸ்தவர்களுக்கு மட்டும் தடை, சீக்கியர்களுக்கும்,இந்தியர்களுக்கும்,சீனர்களுக்கும் தடா! நாம் கடவுளை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் !ஏனென்றால் நம் மொழி இரவல் அல்ல !
சீக்கியர்களிடம் வாலாட்டமுடியாது. தங்கவாளை உருவிவிடுவார்கள். சீக்கியர்கள் சீக்கியர்களாகவே வாழ்கிறார்கள். அவர்களின் பெயர்களும் அப்படித்தான். உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்க்ள் என்கிறார்கள். ஆனால், இன்று அந்தத் தமிழர்களைக் காணவில்லை. நடைமுறை புழக்கத்தில் நல்ல தமிழும் இல்லை. டுபுக்கு என்கிறார்கள். இது என்ன சொல் என்றே புரியவில்லை. ஒருவேளை புடுக்கை (விதை) டுபுக்கு என்கிறார்களோ என்று ஒரு சொல்லறிஞர் சொல்கிறார்.
“டுபுக்கு” என்று சினிமாவில் அடிக்கடி வரும் கொச்சை வார்த்தையை அப்படியே நீங்கள் “பு” -வை இடம் மாற்றி முன்னே வையுங்கள், “புடுக்கு” என்று வரும். இக் கொச்சை வார்த்தைக்கு நீங்கள் “விதை” என்று சுத்த தமிழில் சொன்னால் பலருக்கு விளங்காது குசேலரே!
கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளில் ‘அல்லாஹ்’ பாட்டு பாடிய பிறகேத்தான் வகுப்பில் பாடங்கள் தொடங்கப்படுகிறது.