கிழக்கு தென் சீனக்கடலில் உள்ள சென்காகு தீவுகள் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சென்காகு தீவை சீனா டையாயூ தீவுகள் என்றும் உரிமை கொண்டாடுகிறது. இதையடுத்து ஜப்பான், சீனா நாடுகளிடையே போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இப்பிரச்சினைக்குரிய சென்காகு கடல் பகுதியில் சீனா கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் ஊடுருவியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அந்த கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறியுள்ளது.
டிசம்பர் 29-ம் திகதிக்கு பிறகு, சீனா இந்த ஆண்டில் முதலாவது முறையாக இந்த மூன்றுகப்பல்களை அனுப்பி தனது பிரதேச உரிமையை பகிரங்கப்படுத்த முயற்சி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இயற்கை வளங்கள் நிறைந்த இந்த தீவுகளை சீனா மற்றும் தாய்வான் நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.