மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் தற்போது அம்பலமாகி உள்ளது.
கிரேக்க நாட்டில் 356 கி.மூ வில் மாவீர புதல்வராய் தோன்றியவர் அலெக்ஸாண்டர், இவர் மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் அழைக்கப்பட்டார்.
உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளை குவித்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.
தன் 32 வயது வரை பெரும் போர்களை அசாதாரணமாக மேற்கொண்டு, உலகின் பெரும்பகுதியை வென்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் தனக்கென தனி இடம் ஒன்றை பிடித்து தோல்வியே கண்டிராத இம்மாவீரரின் மரணம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
இதுகுறித்து ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர் லியோ செப் கூறுகையில், கேளிக்கை விருந்தின்போது அலெக்ஸாண்டர் அதிக அளவில் மது அருந்துவது வழக்கம்.
அப்படியான விருந்தொன்றின்போது, அவருக்கு வெராட்ரம் ஆல்பம் எனப்படும் மூலிகைச் செடியின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது வழங்கப்பட்டிருக்கிறது, வெராட்ரம் ஆல்பம் வொய்ட் ஹெல்போர் எனவும் அழைக்கப்படுகிறது.
வெள்ளை நிறப் பூவை உடைய இந்த மூலிகை, கிரேக்க பழங்கால மருத்துவத்தில் வாந்தி எடுக்கத் தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பூவைக் கொண்டு நொதிக்கச் செய்யப்பட்ட மதுவே, அலெக்ஸாண்டரின் உயிரைப் பறித்திருக்கிறது.
மற்ற விஷங்கள் உடனடியாகக் கொன்றிருக்கும். ஆனால், அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில் 12 நாட்கள் இருந்தார்.
அவரால் நடக்கவோ, பேசவோ இயலவில்லை. மிகுந்த அவஸ்தைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அலெக்ஸாண்டருக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது என்பது புரியாத ஒரு விடயமாக உள்ளது எனவும் ஆய்வாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.