காதலர் தினம் கொண்டாடுகிறார் போப் ஆண்டவர்

pope_francis_001உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ம் திகதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார், காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இவரது நினைவாக பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த தினம் வாடிகன் நகரில் கொண்டாடப்பட மாட்டாது. ஆனால் இந்தாண்டு மறைமுகமாக விழா கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு போப் ஆண்டவர் தலைமையிலான கவுன்சிலில் இருந்து பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வருகிற பிப்ரவரி 14ம் திகதி வாடிகன் நகரத்தில் விழாவொன்று நடைபெற உள்ளது.

பங்கேற்க விரும்புபவர்கள் வருகிற 30ந் திகதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் திருமணமானவர்களாகவும், திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.