ஆப்கானிஸ்தான் விவகாரம்: இந்தியா, சீனா, ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை

Taliban-Fighters1ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பெய்ஜிங் நகரில் வியாழக்கிழமை இந்தியா,சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக தலிபான் மற்றும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்புக்குப் பிறகு சீனா அங்கு சுரங்கங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.