கறுப்பு- காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடுவதற்கான அனுமதிப் பத்திரத்தை ஏலத்தில் வாங்கிய அமெரிக்கர் ஒருவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மூன்றரை லட்சம் டாலர்கள் கொடுத்து இந்த வேட்டை அனுமதிப் பத்திரத்தை ஏலவிற்பனையில் அவர் வாங்கியிருந்தார்.
இந்த ஆப்பிரிக்க கறுப்பு- காண்டாமிருகம் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
நமீபியாவில் உள்ள இந்த காண்டாமிருகத்தை சுட்டுக்கொல்வதற்கான உரிமத்தை வென்றுள்ளவராக தனது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கோரேய் நோவ்ல்டன் தெரிவித்துள்ளார்.
காண்டாமிருக பாதுகாப்பு நிகழச்சித் திட்டத்திற்காகவே இந்த வேட்டை உரிமம் ஏலத்திற்கு விடப்பட்டதாக டலஸ் சஃபாரி கிளப் என்ற டெக்சாஸ் நிறுவனம் கூறுகிறது.
சில ஆயிரம் ஆப்பிரிக்க கறுப்பு காண்டாமிருகங்களே இன்று உலகில் உள்ளன.
மிகவும் வயதான- இனவிருத்தி செய்யமுடியாத- ஆபத்து மிக்கது என்று அறியப்பட்ட ஒரு காண்டாமிருகமே இந்த அனுமதி மூலம் வேட்டையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC