அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சென்று விட்டால், சிம்பன்ஸிகள் வழியை கண்டுபிடித்து கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன்ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரியவந்தது.
இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது.
காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை.
ஆனால், சிம்பன்ஸிகள் சைகை மூலம் மனிதர்களுக்கு உணவு இருந்த இடத்தை கண்டுபிடித்துக் கொடுத்தன.
இதுகுறித்து செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் அண்ணா ராபர்ட்ஸ் கூறுகையில், இந்த ஆய்வின் முடிவுகள் மொழிகள் எவ்வாறு உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டெர்லிங் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா ஜான் விக், தற்போதைய ஆய்வின் மூலம் மிகவும் சிக்கலான சூழலில் சிம்பன்சிகள் தங்களது அறிவுத் திறனை வெளிப்படுத்த முடியும் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.