அதிகமான தகவல்களை தெரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் ராம்ஸ்கர் என்பவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர்.
சேமிக்கப்படும் தகவல்கள் அதிகமாகும்போது, கணிப்பொறியின் செயல்பாடு தாமதமாவது போன்று வயதானவர்களின் மூளையும் மெதுவாகச் செயல்படுவதாக அவர்கள் தங்களது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
வயதானவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட “ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளுதல்’ சோதனை அடிப்படையில் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டதாக மிக்கேல் ராம்ஸ்கர் தெரிவித்தார்.