தாய்லாந்து எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை

thailand_304x171_reuters_nocreditதாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் அரசாங்க ஆதரவாளர்களுடனான மோதல் ஒன்றின் போது அரச எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுதின் டரட்டின் அவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில் தலைநகரிலும், ஏனைய நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கான வழியை தடுக்க முயன்றபோது வன்செயல்கள் வெடித்தன.

பாங்காக்கில் உள்ள 50 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முற்றாக தடுக்கப்பட்டது அல்லது நிறுத்தப்பட்டது.

தற்போதைய அரசியல் முறை மாற்றஞ்செய்யப்படும் வரை எந்தவொரு தேர்தல் நடப்பதையும் எதிர்ப்பு இயக்கம் நிராகரிக்கிறது. -BBC