சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பதவியிலிருந்து தூக்கப்படலாம் என்ற ஊகம் பரவி வரும் வேளையில் அதற்கு மேலும் வலுசேர்ப்பதுபோல் பிகேஆர் பிரதிநிதி ஒருவர் தம் சட்டமன்ற இடத்தைக் காலி செய்துள்ளார்.
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ, இன்று பிற்பகல் பெருந் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்த பின் பதவிவிலகல் கடிதத்தைத் தாக்கல் செய்தார்.
அன்வார் போட்டியிடுவதற்கு இடமளித்துதான் அவர் விலகுகிறார் என்று ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பாஸ் கட்சியின் கமிஷனருமான இஸ்கந்தர் சாமாட், அன்வார் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுடியன் தமக்கு இத்தகவலை அளித்ததாக இஸ்கந்தர் தெரிவித்தார்
லீ தம் தொகுதியைக் காலி செய்தார் என்பதை சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோவும் உறுதிப்படுத்தினார்.
லீயின் பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்ட சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ லீயின் பதவி விலகலுக்கான காரணம் மற்றும் அன்வார், லீயின் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இப்பதவி விலகல் ஏற்பாடு செய்யப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
“வேட்பாளர் யார் என்பது பற்றியோ, இதர வதந்திகள் பற்றியோ நான் பேச விரும்பவில்லை. இன்றிலிருந்து அத்தொகுதியின் இருக்கை காலியாகி விட்டது. அவ்வளவுதான்”, என்று ஹன்னா கூறினார்.
“அது பிகேஆர் இருக்கை. பிகேஆர்தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்சி”, என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இன்று முன்நேரத்தில், தாம் காலிட் இடத்தை எடுத்துக்கொள்ளப் போவதாக கூறப்படுவதை அன்வார் மறுத்த வேலையில், காலிட்டும் தாம் பதவி விலகுவதாக பேசப்படுவதை நிராகரித்தார்.
இந்த விவகாரம் கசிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பக்கத்தான் பங்காளி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது என்று பிகேஆர் வட்டாரம் கூறிற்று.
இதனால் பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதை அந்த வட்டாரம் ஒப்புக்கொண்டது என்றாலும், இது அவசியமானது என்று வலியுறுத்தப்பட்டது.
சிலாங்கூர் மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்னைகள் சம்பந்தமாக அன்வார் நாளை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
பிஎஸ்எம் போட்டியிடக்கூடும்!
காஜாங் சட்டமன்ற தொகுதி காலியானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) களமிறங்கும் சாத்தியம் உண்டு.
அத்தொகுதியைச் சேர்ந்த பல வாக்காளர்கள் பிஎஸ்எம் அதன் வேட்பாளர் ஒருவரை அத்தொகுதியில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை கட்சியின் அலுவலகத்திற்கும், அதன் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது, “உண்மைதான். கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் பிஎஸ் எம் போட்டியிடுவதை விரும்புகின்றனர்”, என்று தலைமைச் செயலாளர் அருட்செலவன் கூறினார்.
“ஆனால், இது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்”, என்றாரவர்.
பக்காத்தான் தலைவர்கள் விரைவாக செயல் பட்டு மந்திரி பேஜார் அப்துல் காலிட் இப்ராகிமை பதவியிலிருந்து விலக்கி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்! நிடித்தால் பக்காத்தானுக்கு களங்கம் தொடர் கதையாக தொடரும் !கட்சி முக்கியமா மந்திரி புசார் காலிட் முக்கியமா ?
சிலாங்கூரில் முதல்வர் காலித் திறம்பட செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்துரைக்கின்றன. அஸ்மின் அலி, முதல்வர் பதவி மீது குறி வைத்துள்ளதால் ஏற்பட்ட சிக்கல் இது. இந்த அஸ்மின் அலி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து,வீட்டுக்கு நடையை கட்டினால், தீர்ந்தது பிரச்சினை!
சரியான ஏற்பாடுதான்..! மந்திரி பெசார் இப்ப அம்னோவுக்கு தலையாட்டும் பொம்மையாகி விட்டார். அவரை கலை எடுப்பதுதான் சரியான முடிவு. மத்திய அரசு விலை எற்றத்தை கொண்டு வந்தவுடன் மாநில அரசு உடனடியாக சில அத்தியாய பொருட்களின் விலைகளை குறைப்பதாக சொல்லியிருக்கணும் . அதை விடுத்து மாநிலத்தில் பணத்தை மிச்சப்படுத்தி வைத்திருப்பதாக சொல்வது கேளிக் கூத்தாக இருக்கிறது..?
அன்வாருக்காக இருந்தால் இது இரண்டாவது இடைதேர்தலாகும். முன்பு பெர்மாத்தாங் பாவும் இப்போது காஜாங். சூப்பர் பாரிசன் மக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதாக சொல்லும் மாற்று கூட்டணி. இந்த இடைத தேர்தலை நடத்துவதின் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யவில்லையோ ?
எல்லோரும் திருடன் அன்வர் பதவி மோகம் கொண்டவன்
அன்வர் பதவி மோகம் கொண்டவனாகயிருந்தல் ,அவன் 2008 அல்லது 2013 தேர்தலுக்கு பிறகு மாநில முதல்வராக ஆயிர்ருப்பர்.
அவர் பக்க்தானின் தூன்.அவர் இல்லையேல் பக்கத்தான் (PR) இல்லை ..எல்லோரும் திருடர்கள் தான் நீங்களும் நானும் என்ன விதி விலக்கா ???சாதாரண குடும்ப உறுப்பினர்களையே நிர்வாகம் செய்ய திண்டாடுகிறோம் ,,அரசியல் என்ன கிள்ளுக்கீரையா
??????