குலா: அடித்த ஆசிரியரை அடிவாங்கிய துணை அமைச்சர் மன்னித்து விட்டேன் என்பது ஏமாற்றமளிக்கிறது

 

kamalanathanஅடித்தவர் ஆசிரியர். அடிவாங்கியவர் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். அவரை இவர் மன்னித்து விட்டதாக கூறுவது ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்னையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடிவாங்கிய துணை அமைச்சர் கமலாநாதன் கூற்றுப்படி அது அவருக்கும் அடித்த உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு உதவி செயலாளர் முகம்மட் ரிஸுவான் சுஹைமிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். அடிக்கப்பட்டவர் ஒரு துணை அமைச்சர். அவர் தனிப்பட்டவர் அல்ல. ஆகவே, இது தனிப்பட்ட விவகாரமல்ல.

கமலநாதன் எடுத்துள்ள முடிவு ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்மையைக் காட்டுகிறது ஏனென்றால் வன்செயலை அவ்வலவு சுலபமாக மன்னித்து விட முடியாது என்று குலா கூறுகிறார்.

“மன்னிப்பவன் தெய்வமாகலாம். ஆனால், ஒரு துணைக் கல்வி அமைச்சரான கமலநாதன் மிருகத்தனமாக தாக்கிய ஓர் ஆசிரியரை மன்னிக்கலாமா? அவரது செயலான மன்னித்தல் நமது பள்ளி  மாணவர்களுக்கு எம்மாதிரியான போதனையை வழங்குகிறது”, என்று குலா வினவினார்.

அவருடைய முடிவுடன் பொதுமக்களில் பலருக்கு கருத்து உடன்பாடு இருக்காது என்பது மட்டுமல்ல, அவர் அம்னோவின் அரசியல் அழுத்தத்திற்குட்பட்டு பெரும் மனதினரானாரா அல்லது அம்னோவுக்கு ஈடுகொடுக்க இயலாத கோழையானாரா என்று பலர் கேள்வி எழுப்புவர் என்பது நிச்சயம் என்றார் குலா.

கமலநாதன் தாக்கப்பட்டது நாட்டிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kulaகமலநாதனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது கட்சியின் வழக்குரைஞர்களான தன்னையும், கோபிந்த் சிங் மற்றும் சிவநேசன் ஆகியோர் அவருக்கு சட்ட உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் உடனடியாக அறிவிப்பு செய்ததை குலா சுட்டிக் காட்டினார்.

ஜனவரி 16 இல், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின் தம்மால் அச்செயலை மன்னித்துவிட முடியாது என்று கூறியதோடு சம்பந்தப்பட்ட அந்த அம்னோ உறுப்பினருக்கு என்னதான் பிரச்னையாக இருந்தாலும், அது போன்ற வலுத்தாக்குதலுக்கு அடிப்படைய நியாயம் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

5 நாள்களுக்கு முன்பு, மசீச இளைஞர் பிரிவின் சட்ட அலுவலகம் முகமட் ரிஸுவான் சுஹைமி மீது வழக்கு தொடர சட்டத்துறை தலைவருக்கு (எஜிக்கு) உதவி அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததையும் குலா சுட்டிக் காட்டினார்.

இவ்வளவு ஆதரவு இருந்தும், மன்னிக்கக்கூடாத ஒருவரை மன்னிக்கும் பெருந்தன்மையை எப்படி பெற்றார் என்பதை கமலநாதன் விளக்க வேண்டும் என்று குலா கேட்டுக்கொண்டுள்ளார்.

போலீசார் இத்தாக்குதல் குறித்து அவர்களின் புலனாய்வு பத்திரங்களை ஜனவரி 15 இல் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் தாக்கல் 1 mic palaசெய்து விட்டதாக சிலாங்கூர் போலீஸ் மூத்த கமிஷனர் சூகிரி டாலான் அறிவித்துள்ளார். ஏன் இன்று வரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று எஜி கனி பட்டேயல் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

மஇகா…?

மன்னிப்பது என்று கமலநாதன் எடுத்துள்ள முடிவுடன் மஇகா தலைவர் ஜி. பழனிவேல் ஒத்துப்போகிறாரா என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள குலசேகரன், அவர் ஒத்துப்போகவில்லை என்றால், மஇகா அவருக்கு நீதி பெற்றுத்தர தயாரா என்று கேட்டுள்ளார்.

 

TAGS: