சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேசுகையில், 2014ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி பெறும்.
பொருளாதார நிலையற்றத் தன்மையை சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் அளிக்கப்பட வேண்டும், பெண்கள் முன்னேறினால் தான் அமெரிக்காவும் வளர்ச்சி அடையும்.
வெளிநாடுகளின் முதலீடுகளை பெறுவதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அதிகாரங்களை தொழிலாளர்களின் நிலையை உயர்த்த பயன்படுத்தப் போவதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.