சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முதல்சுற்றில் எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி லக்தார் ப்ராஹிமி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
எனினும் தாம் இது குறித்து கவலை கொள்ளவில்லை என்றும், சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலம் இறுக்கமான நிலைமை, இலகு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.