இந்தியாவுக்கு ஆயுதம் கடத்திய இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

bangladesh_304x171_reutersபங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியான, ஜமாத் இ இஸ்லாமிக் கட்சியின் தலைவர், மொய்துர் ரஹாம் நிஸாமி, இந்தியாவில் இயங்கும் கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கு ஆயுதங்களைக் கடத்தி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மாநிலமான அஸ்ஸாமில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆயுதங்களை 2004ம் ஆண்டில் கடத்திச் சென்று தந்ததாக, நிசாமி மற்றும் வேறு 13 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் ஒருவரும் அடங்குகிறார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப்போவதாக நிசாமி கூறியிருக்கிறார்

இவர் 1971ல் நடந்த பங்களாதேஷ் சுதந்திரப் போரில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தால் குற்றவாளியென்று காணப்பட்டிருக்கிறார். இதற்கும் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். -BBC