காஜாங் இடைத் தேர்தல் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லப்படுவதை மக்கள் பொருட்படுத்தக் கூடாது என்றுரைத்து பிகேஆருக்குத் தன் ஆதரவு என்றென்றும் உண்டு என்பதை டிஏபி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இடைத் தேர்தல் கூட்டரசு அரசாங்கத்துக்கும் மாநில அரசுக்கும் மக்களிடமுள்ள ஆதரவை அளவிட உதவும் என டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறினார்.
இடைத் தேர்தல், விலை உயர்வு, மனித உரிமைமீறல்கள், குற்றச்செயல் அதிகரிப்பு முதலிய விவகாரங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அதேபோல் அவை தொடர்பில் தனது பக்க நியாயத்தை எடுத்துரைக்க பிஎன்னுக்கும் அது வாய்ப்பை அளிக்கும் என்றாரவர்.
கர்ப்பால் சிங் அவர்களே,இடைத்தேர்தல் பக்காத்தானுக்கு பண விரயம் இல்லை!அம்னோ வெற்றி பெற பணத்தை அள்ளி வீசுமே!கெடா சிம்பங்க் லிமாவு இடைத் தேர்தலிலும் பணத்தை அள்ளி வீசியும் தோல்வியே! இடை தேர்தலில் காஜாங் வாக்காளர்களுக்கு சீனி ஒரு கிலோ ஒரு வெள்ளிக்கு கிடைக்குமே!
எவ்வளவோ செலவழித்தாகிவிட்டது இதனால் ஒன்றும் கேட்டு விடாது. மக்களின் மனதில் என்ன என்றும் தெரிய வரும்.ஆனாலும் பாகாத்தான் கவனமுடன் செயல் பட வேண்டும். அவன்களின் தில்லு முள்ளு களுக்கு அளவே கிடையாது.