ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

john_kerry_usசிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை முழுமையாக அழிப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற அமெரிக்கா, ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களில் 4 சதவீதமானவை மாத்திரமே அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜேர்மனியில் உள்ள மியுனிக் நகரில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டுக்கு மேலதிகமாக இடம்பெற்ற ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

சிரிய இரசாயன ஆயுதங்களை இந்த ஆண்டு ஜுன் மாதம் 30ம் திகதி அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஆயுதங்களை பாதுகாப்பாக பொதி செய்யும் பொறுப்புகள் சிரியாவின் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பணிகள் துரிதமாக இடம்பெறவில்லை என்று ஜோன் கெரி குற்றம் சுமத்தியுள்ளார்.