என் இளமைக்காலம் எப்படி இருந்தது தெரியுமா? மனம் திறக்கிறார் ஒபாமா

obamaஅதிகாலையில் எழுந்து படித்தாலும் கூட தான் பொறுப்பற்ற மாணவராகவே இருந்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டென்னெஸ்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஒபாமா , அங்கு நிகழ்த்திய உரையில் தனது மாணவப் பருவத்தை குறித்து நினைவு கூர்ந்தார்.

அப்போது பேசிய அவர், என்னுடைய பால்ய பருவத்தில் என் தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்.

6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் என்ற கவலை எனது தாயாருக்கு இருந்தது. எனவே, அதிகாலை 4.30-5.00 மணிக்கே என்னை தட்டி எழுப்பி படிக்க செய்வார்.

ஆனால் அது எனக்கு பிடிக்காது. எனவே எழுந்திருக்க அடம் பிடிப்பேன். அதே நேரத்தில் 8 வயதான போது அதிகாலை 4 மணிக்கே எழுந்து படித்தேன்.

மேலும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களிடம் பணம் இல்லாததால் அரசின் கல்வி உதவி தொகை மூலமே படிக்க முடிந்தது என்றும் படிக்கும் போது சில நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்தாலும் எனது பள்ளிப்பருவம் முழுவதும் பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.