கனடாவில் பனிப்பொழிவின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் தொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து Golden Horseshoe, north of Lake Ontario பகுதிகளுக்கு செவ்வாய் நடுஇரவு வேளையில் பரவும் பனிப்பொழிவு இன்று ஒன்றாரியோவின் கிழக்குப் பகுதிக்கும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் பல பகுதிகளில் இன்று விடியும் முன்பே சிறிதளவான பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் நைகரா, ஹமில்ரன், பகுதிகளில் 15 சென்டி மீற்றரிலும் பார்க்க அதிகளவான பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் Oakville, Burlington, Hamilton, Niagara ஆகிய பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், இப்பனிப்பொழிவினால் விமான சேவைகளில் தாமதங்கள் நிகழலாம் என்பதால் பயணிகள் விமான நிலையங்களை அனுகும் முன்பே விமான சேவை விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் பின் விமான நிலையத்திற்கு வருகை தரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.