பாகிஸ்தானில் இன்று காஷ்மீர் ஒருமைபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் முகமத்நவாஸ் ஷெரிப் கூறும் போது
காஷ்மீர் நமது உரிமை என பேரணி மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது ஜம்முகாஷிமீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தைமூலம் தீர்வு காண பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைதியான ஒரு தீர்வை காணவும் காஷ்மீரின் சுய நிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அவசியம் என்று கூறினார்.
அதோடு காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு காண பாகிஸ்தான் தனது ஆக்கப்பூர்வமான பங்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.