தெரேசாவின் வீடியோவைப் பார்ப்பதைவிடவும் உருப்படியான வேலை இருக்கிறது

kok videoசிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்,  அவரது  சர்ச்சைக்குரிய  சீனப்  புத்தாண்டு  நையாண்டி  காணொளியைக்  காண  வருமாறு  விடுத்த  அழைப்பை   ஏற்க  மறுத்த  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  ஷாபி  அப்டால் “அதைவிடவும்  உருப்படியான  வேலை”  தமக்கு  உண்டு என்றார்.

ஷாபி,  தெரேசா கொக்கின்  காணொளி  லாஹாட்  டத்து-வில் பாதுகாப்புப்  படைகளின்  நடவடிக்கையைக் குறைகூறுவதாகக்  கூறி  இருந்ததை மறுத்த  தெரெசா,  ஷாபி  தம்முடன்  காணொளியைப்  பார்த்து  அதில்  எந்தப்  பகுதி  பாதுகாப்புப்  படைகளைக்  குறைகூறுகிறது  என்பதைச்  சுட்டிக்காட்ட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டதற்கு  ஷாபி  இவ்வாறு  கூறினார்.