தேர்தல் ஆணையம், காஜாங் இடைத் தேர்தலின்போது “பாலியல் அவதூறு” கூறும் பரப்புரைகளைத் தடுக்க விரும்பினால் “சட்ட விதிகளைக் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்” எனப் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் கூறினார்.
சட்ட விதிகள் உள்ளன; அமலாக்கம்தான் இல்லை என்றாரவர்.
காஜாங் இடைத் தேர்தலில் எல்லாத் தரப்பினரும் ஒழுக்கக் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாக ஷாபி இவ்வாறு கூறினார்.
“சட்ட விதிகள் நிறையவே உள்ளன.. ஆனால், அமலாக்கம் இல்லையென்றால் அவற்றால் என்ன பயன்?”, என்றவர் வினவினார்.
இதையெல்லாம் பார்த்து, பார்த்து, கேட்டு, கேட்டு மக்களுடைய கண்களெல்லாம் பூர்த்து, காது புளிச்சுப் போய் விட்டது. இதைக் கேட்க மக்கள் கூட்டம் வராது. அம்னோ குடுக்கும் உணவினைத் தின்ன மட்டும் பெருங்கூட்டம் கூடும். அழியுங்கள். அது என்ன அனாமத்தேயாக வந்த பணம்தானே.
பழக்க தோசத்தை இப்படி சட்டுன்னு மறக்கனும்னா எப்படிங்க முடியும் எங்களால்?? எங்கள் உடல், உயிர், ஆவி, மூச்சு, பேச்சு, செயல், சிந்தனை, கற்பனை எல்லாமே அதுதானே..!!
சட்ட விதிகள் நிறையவே இருக்குது ஆனால் அனக்கொண்டா அம்னோவை தீண்டாதே,எதிர் கட்சியை தான் விழுங்கும் !