ஈராக்கில் சித்திரவதை செய்து கற்பழிக்கப்படும் பெண்கள்

iraq_women_001ஈராக் நாடு தீவிரவாத தாக்குதலால் அல்லல்பட்டு வருகிறது. தினமும் அப்பாவி மக்கள் குண்டு வெடிப்பில் பலியாகிறார்கள்.

இந்நிலையில், மனித உரிமை கண்காணிப்பு குழு புதிய பேரதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க மனித உரிமை குழு துணைத்தலைவர் ஜோஸ் ஸ்டோர்க் என்பவர் ஈராக் பெண்கள் அனுபவிக்கும் தொல்லைகள் குறித்து ‘யாரும் இங்கு பாதுகாப்பாக இல்லை’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், ஆயிரக்கணக்கான ஈராக் பெண்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சட்டவிரோதமாக ராணுவத்தால் பிடித்து சிறைவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு தொடரவோ நீதிமன்றில் ஆஜர்படுத்தவோ மாட்டார்கள்.

விசாரணை என்ற பெயரில் அடிப்பது, குத்துவது, தலைகீழாக தொங்க விட்டு சித்ரவதை செய்தல், மின்சாரத்தை பாய்ச்சுதல் மற்றும் உறவினர், குழந்தைகள் முன்னிலையில் கற்பை சூறையாடல் போன்ற கொடூரத்துக்கு இந்த பெண்கள் ஆளாகி வருகிறார்கள் என்று விவரித்துள்ளார்.