டூத்பேஸ்ட்களில் வெடிபொருட்கள்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

toothpaste_001டூத்பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் திகதி வரை நடக்கிறது.

இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதால், ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர்.

அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத்பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.