வேதமூர்த்தி துணை அமைச்சர், செனட்டர் பதவிகளை துறக்கிறார்

1 hindrafபெசாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் தலைவரும் பிரதமர்துறையில் துணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பி. வேதமூர்த்தி தமது பதவிகளை துறக்க விருப்பதாக அந்த அமைப்பின் தேசிய ஆலோசகர் என். கணேசன் கூறுகிறார். பெப்ரவரி 10 ஆம் தேதி வேதமூர்த்தி தமது விலகவிருக்கிறார்.  பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு இழைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நம்பிக்கை துரோகச் செயல் வேதமூர்த்தியின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பதவி துறத்தல் சம்பந்தமான தீர்மானத்தை அமைப்பின் மத்தியக் குழு இன்று எடுத்ததாக கணேசன் மேலும் கூறினார்.

பாரிசான் நேசனலுக்கும் ஹிண்ட்ராப்புக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாரிசான் நிறைவேற்ற தவறியதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது என்று பினாங்கு ஹிண்ட்ராப் கூறுகிறது.

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி எற்று எட்டு மாதங்களாகி விட்டன. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் எநத பலனையும் அளிக்கவில்லை என்று ஹிண்ட்ராப் செயலாளர் பி. ரமேஷ் கூறினார்.

ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கத் தவறியதால் “நஜிப்பும் பிஎன்னும் இந்திய சமூகத்திற்கு வரலாற்றுப்பூர்வமான நம்பிக்கைத் துரோகம்” இழைத்துள்ளனார் என்றார் ரமேஷ்.

“அது நடக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். அதன் விளைவாக, எதிர்வரும் திங்கள்கிழமை வேதமூர்த்தி அனைத்து அரசாங்க பதவிகளையும் செனட் உறுப்பினர் பதவியையும் துறக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப்பின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது”, என்று ரமேஷ் மேலும் கூறினார்.

 

 

TAGS: